ருவரின் ஜனனகால ஜாதகத்தை இயக்கு வது கோட்சார கிரகங்கள்தான் என்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது கோட் சாரத்தில் காலபுருஷ 9-ஆம் இடமான தனுசில் சனி, கேது, குரு இணைந்துள்ளன. இந்த கிரக இணைவு சாதகமா? பாதகமா என்பதைக் காணலாம்.

Advertisment

ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களைப் பொருத்து அமைகிறது. மனிதன் இப்பிறவி யில் அனுபவிப்பதெல்லாம் அவனுடைய கர்மப்பலன்களாகும். இந்த கர்மப்பலன் களைக் கொடுக்கும் கிரகம் கர்மகாரகன் சனி. இந்த பலன்களை அனுபவிப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவைக் குறிக்கும் கிரகம் தர்மகாரகன் குரு என்பதால், மனிதனுக்கு ஏதாவது ஒரு ஆசை எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். ஆசைகள் அழிந்துவிட்டால் அவனுடைய மனம் அழிந்துவிடும். மனம் அழிந்துவிட்டால் அவன் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடுவான். ஒருசிலருக்கு நினைப் பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கிறது. ஒருசிலருக்கு நினைப்பதெல்லாம் நடக்கும். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்? ஒருவருடைய விருப்பமும், அவர் அனுப விக்கப்போகும் கர்மப்பலன்களும் ஒன்றாகவே இருந்துவிட்டால் அவர் நினைப்பது போலதான் நடக்கும். ஒருவருடைய விருப்ப மும், அவர் அனுபவிக்கப்போகும் கர்மப் பலன்களும் வெவ்வேறாக இருந்தால், அவர் நினைப்பதுபோலெல்லாம் நடக்காது. சனியோடு சேர்ந்த, பார்த்த கிரகங்கள் ஜாதக ருடைய கர்மப்பலன்களைக் கொடுக்கும். குருவோடு சேர்ந்த, பார்த்த கிரகம் ஜாதகரின் விருப்பத்தைக் குறிக்கும். ஆகவே, ஜாதகரின் விருப்பமும், கர்மவினையும் ஒன்றாக இருக் கும்போது மனிதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் எண்ணியதுபோலவே நடக்கும்.

கிரக சஞ்சாரத்தால் மனதிலும் உடலிலும் மாற்றங்கள் உண்டாகின்றன. அந்த மாற்றங் களை ஜீவாத்மா அனுபவிக்கிறது. இந்த மாற்றங்களை உண்டாக்கும் கிரகங்கள் கர்மகார கனான சனி மற்றும் ஜீவகாரகனான குரு. எனவே சனி மற்றும் குருவின் கோட்சாரப் பலன்கள் மிகவும் முக்கியமானவை. குரு, சனி இணைவு தர்மகர்மாதிபதி யோகமாகும். இந்த யோகப் பலன் ஜாதகருக்குக் கிடைக்கவேண்டு மென்றால், கோட்சார சனி பிறப்பு ஜாதகத் திலுள்ள குருவுக்கு சம்பந்தம் பெறவேண்டும் அல்லது கோட்சார குரு பிறப்பு ஜாதகத் திலுள்ள சனிக்கு சம்பந்தம் பெறவேண்டும்.

திருக்கணிதப்படி 29-3-2019 அன்று குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசிக்குச் செல் கிறார். 8-4-2019 முதல் 22-4-2019 வரை தனுசு ராசி, மூல நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார்.

Advertisment

கோட்சார குரு, சனி- ஜனன குரு, சனியுடன் சம்பந்தம் பெறும்போது, மனித வாழ்வில் நடை பெறும் சுபநிகழ்வுகளின் பட்டியலை அளவிட முடியாது. இப்பொழுது ஒரு கேள்வி எழலாம். குரு, சனி சம்பந்தம் பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்துமே? அது எப்படி சுபப்பலன் தரும் என்பதே. அதை மறுக்கவில்லை. குருவும் சனியும் ஜனன ஜாதகத்தில் அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டால் மட்டுமே அசுபப்பலன் தரும். வாழ்வில் வெற்றியடைந்த தொழிலதிபர்கள், எப்பொழுதும் பணப் புழக்கம் அதிகமாக இருப்பவர்களின் ஜாத கத்தை ஆய்வுசெய்தால், நிச்சயம் குரு, சனி சம்பந்தம் இருக்கும்.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பகுதியில் குரு, சனி சேர்க்கைப் பலனை அனுபவிப்பார். தற்போதைய குரு, சனி சேர்க்கை சாதகமா அல்லது பாதகமா? குரு, சனிக்கு செவ்வாயுடன் சம்பந்தமில் லாதபோது சாதகத்தையும், சம்பந்தம்பெறும் போது பாதகத்தையும் தருகிறது. பிறப்பு ஜாத கத்தில் ஒரு சம்பவம் நடப்பதற்கான யோக அமைப்பு இருந்தால், கோட்சார கிரகங்கள் அச்சம்பவத்தை நடத்திவைக்கும். ஜாதகத்தில் இல்லாத அமைப்பு, கோட்சார காலத்தில் நடை பெறாது. சனி, குரு, ராகு- கேது ஆகியவற்றின் கோட்சாரப் பலன்கள் மிக முக்கியம்.

கேது ஒரு நிழல் கிரகம். உருவம் கிடையாது.

கேது உறவுகளில் பிரிவினை ஏற்படுத்தும் கிரகமாகும். நிழலாக நின்று செயல்பட்டு கர்மவினையை அனுபவிக்கச் செய்து, ஞா னத்தை நோக்கி அழைத்துச் செல்பவர். கடன், நோய், வழக்கு, தேடுதல் இருப்பவர் களுக்கே ஞானம் கிடைக்கும். சட்டப்படியான மற்றும் சிக்கலான அனைத்தையும் கேது குறிக்கும்.

Advertisment

இந்த மூன்று கிரகங்களையும் ராகு தன் 7-ஆம் பார்வையால் பார்க்கிறார். செவ்வாய் தன் 8-ஆம் பார்வையால் பார்க்கிறார். செவ்வாயின் 8-ஆம் பார்வைக்கு கலவரம், விபத்து, அறுவை சிகிச்சை, கூட்டு மரணம் போன்றவற்றை ஏற்படுத்தும் சக்தி உண்டு.

saturn

1. சனி- பொது மக்கள், பெரிய கூட்டம்.

2. செவ்வாய்- விபத்து, சண்டை, தீக்காயம்.

3. ராகு- நோய், மரணம், துக்க சம்பவம், விபத்துகள், ஊனம்.

4. கேது- தடைகள், பிரிவினைகள், கருத்து வேறுபாடுகள், சட்டம், வழக்கு.

4. குரு- எல்லாவிதமான சுபத்தன்மை, நேர்மை, ஒழுக்கம், தனத்தைக் குறிப்பவர்.

இந்த சந்திப்பு ஆன்மிக- தெய்வ ஸ்தானம், காலபுருஷ 9-ஆம் இடம் என்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. என்றாலும் தர்மஸ்தானாதிபதி குரு வக்ரமும் பெறுவதால் சுபப்பலன்கள் குறைவுபடும். குருவின் காரகத்துவம் அனைத்தும் பாதிப்படையும். தங்கம் விலை குறையும். பொருளாதார ஏற்றத் தாழ்வு மிகுதியாக இருக்கும். நிதி நிலைமை மேலும் தடைப்படும். பண சுழற்சி சீராக இருக் காது. காதல், கலப்புத் திருமணம் அதிகரிக்கும்.

தர்ம காரியங்கள், ஆன்மிக வழிபாடுகள், சித்தர்கள், ஜீவசமாதி தரிசனம், கோவில் விஷயங்களில் முன்னேற்றம் அனைத்தும் பெருகும். ஆன்மிகத்தில் புதிய சட்டங்கள், மதமாற்றங்கள் ஏற்படும். சனியின் மூன்றாம் பார்வை கும்பத்திற்கு இருப்பதால் கோவில் சொத்துகளுக்கு புதிய சட்டம் வரும். ஆன்மிகம் என்ற பெயரில் தவறு செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள். இறையுணர் வில்கூட மாறுபட்ட கருத்தே மிகும். பொதுமக்கள் பிழைப் பிற்காக வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலம் செல்லநேரும்.

தனுசில் அமர்ந்த சனி பகவான் ஏழாம் பார்வையாக மிதுனத் தையும், பத்தாம் பார்வையாக கன்னியையும் பார்ப்பதாலும், புதன் எழுத்தாளர்களையும் ஜோதிடர் களையும் குறிப்பதாலும் புதிய எழுத்தாளர்கள், ஜோதிடர்கள் உருவாகுவார்கள்.

சனி பகவான் பத்தாம் பார்வையாக கன்னி ராசியைப் பார்ப்பதால், ஆசிரியர்களுக்கு உத்தியோக பாதிப்பு ஏற்படும். ஆசிரியர் களுக்கு புதிய சட்டங்கள் இயற்றப்படும். அவர் களுடைய திறமையை சோதிக்க தனித் தேர்வும் எழுத நேரும். எனவே இக்காலத்தில் ஆசிரியர்கள் கவனமாக செயல்படவேண்டும். வங்கி ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். வங்கிகளில் புதிய திட்டம் அறிவிக்கப்படும். கல்வியில் பாடத் திட்டம் மாற்றம், தேர்வு முறையில் குழப்பம் உண்டாகும்.

புதன், ராகு- கேதுவுடன் தொடர்பிலுள்ள தால், மாணவர்கள் கல்வியில் சிறக்க அதிகம் உழைக்க வேண்டும். சுகபோகம் அதிகம் தரும் விஷயத்தில் மாணவ- மாணவியர் நாட்டம் கொள்வதால் கல்வியில் பின்னடைவு ஏற்படும். குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மிகுதியாக இருக்கும். பிறக்கும் குழந்தைகள் கொடிசுற்றிப் பிறக்கும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி மாட்டுவார்கள். நீதி வீட்டிலிருக்கும் சனி- கேது தர்மத்தை நிலைநாட்டும்.

செவ்வாயின் 8-ஆம் பார்வையும், ராகு வின் 7-ஆம் பார்வையும் குரு, சனி, கேதுவுக்கு இருக்கின்றன. குரு வக்ரம்பெற ஆரம்பித்த வுடன் நாட்டில் மதக்கலவரம், தேர்தல் பிரசாரம் நடைபெறும் இடம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிவிபத்து, கூட்டு மரணம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதால், பொதுமக்கள் தங்களையும், தங்கள் உடமை களையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

ஆன்மிக, தேசத் தலைவர்கள், அரசியல் வாதிகளுக்கு ஆபத்து அதிகம். சனிக்கு திரிகோணத்தில், செவ் வாய் மேஷத்தில் நின்றபோது 40 இந்திய வீரர்களின் அகால மரணம் நிகழ்ந்ததை யாரும் மறக்கமுடியாது.

சனியும் கேதுவும் நெருக் கமான டிகிரியில் இருப்பதால், மக்களுக்கு நிலையில்லாத வருமானம் ஏற்படும். கூலித் தொழிலாளிகள் வஞ்சிக்கப்படலாம். முதலாளி- தொழிலாளி கருத்து வேறுபாடு, வழக்குகள் ஏற்படும். வேலையில்லா திண்டாட்டம் மிகுதியாகும்.

வழக்கறிஞர், நீதித்துறை, ஆடிட்டிங் தொழில், நாட்டு மருந்துக் கடை, மருத்து வமனை சார்ந்த தொழில், மின்சாரம், கயிறு, ஊசி பயன்பாடு அதிகம் இருக்கும் தொழில், சேவைகளைச் செய்பவர்களையும், பேராசை யில்லாத உழைப்பாளிகளையும் கேதுவின் காரகத்துவம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

சிலருக்கு கோவில் கட்டும் அமைப்பும், சிலருக்கு பாதிப்படைந்த பழமையான திருக் கோவில்களை சீரமைப்பு செய்யும் வாய்ப்பும், இன்னும் சிலருக்கு ஆன்மிகத்தில் அதிகமான ஈடுபாடும் இருக்கும். சிலருக்கு ஆலயம் சம்பந்தப்பட்ட பதவிகளையும், அறங்காவலர் போன்ற பணிகளையும் கேது தருவார்.

வம்பு, வழக்கில் சிக்கி திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தீர்ப்பு வரும். அநியாய வட்டி, கந்து வட்டி வாங்குபவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள்.

தர்ம ஸ்தானத்தில் சனியுடன் இணைந்த கேது, தந்தை, முன்னோர்வழியில் கெடுபலன் களையும், தந்தைவழி உறவினர்கள்மூலம் வீண்விவகாரங்களையும், பூர்வீகச் சொத்து களை அனுபவிக்கமுடியாத நிலைமையையும், அதிர்ஷ்டக் குறைவான பலன்களை அனுப வித்தவர்களுக்கு தனுசில் குரு- சனியுடன் இணையும் கேது சுபமான தீர்ப்பையும் பெற்றுத் தருவார்.

பரிகாரம்

தினமும் கோளறு திருப்பதிகம் பாரா யணம் செய்வதுடன், ஆலயங்களில் நாட்டு நலனுக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

செல்: 98652 20406